18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு மதுபான விற்பனைக்கு தமிழக அரசு விடுமுறை அளித்துள்ள போதிலும் ஒட்டன்சத்திரத்திரம் பகுதியில் மதுபான விற்பனை ஜோர்..

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு மதுபான விற்பனைக்கு தமிழக அரசு விடுமுறை அளித்துள்ள போதிலும் ஒட்டன்சத்திரத்திரம் பகுதியில் மதுபான விற்பனை ஜோர்..

எழுதியவர்: ஆசிரியர் January 16, 2019, 11:23 pm

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு மாட்டுப் பொங்கல் இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் மற்றும் மதுபான விடுதிகளும் விடுமுறை அளித்துள்ளது. ஆனால் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் பகிரங்கமாக காவல் நிலையம் அருகே அமோகமாக மது விற்பனை. 100 ரூபாய் மதிப்புள்ள மது பாட்டிலை 180 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக மதுபிரியர்கள் கடைக்காரரிடம் வாக்குவாதம்.

கடந்த மாதம் நிலக்கோட்டை தாலுகாவில் பள்ளபட்டி அருகே போலி மது அருந்தி இரண்டு நபர்கள் உயிரிழப்பு பள்ளபட்டி பகுதியில் போலி மது விற்ற 5 நபர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருந்த நிலையிலும் இன்று ஒட்டன்சத்திரம் காவல் நிலையம் அருகே மது விற்க்கப் படுவதாக பொது மக்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் கவலை அடைந்துள்ள நிலையில் மாவட்ட மதுவிலக்கு சார்பு ஆய்வாளர் பாண்டியன் மதுவிற்பனை செய்து கொண்டிருந்த இருவரை கைது செய்து ஒட்டன்சத்திரத்திரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

செய்தி:- ஃபக்ருதீன், திண்டுக்கல்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!