18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பனைக்குளம் மெட்ரிக்குலேசன் பள்ளி ஆண்டு விழா..

பனைக்குளம் மெட்ரிக்குலேசன் பள்ளி ஆண்டு விழா..

எழுதியவர்: ஆசிரியர் January 16, 2019, 11:34 am

இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் நஜியா மெட்ரிக்., மேல்நிலைப் பள்ளி 24ஆம் ஆண்டு விழா நடந்தது. சாத்தான்குளம் ஜமாத் தலைவர் காபத்துல்லா தலைமை வகித்தார். நஜியா மெட்ரிக்., மேல்நிலைப் பள்ளி நிறுவனர் ஹாஜி எச்.ஹலிபுல்லாஹ் கான், ஹாஜியானி, பவுசுல் ஹனியா, பனைக்குளம், அழகன்குளம், ஆற்றாங்கரை, புதுவலசை, சித்தார்கோட்டை, வாழூர், தேவிபட்டினம், புதுமடம், உச்சிப்புளி ஜமாத் தலைவர்கள் முன்னிலை வகித்தனர். ஆசிரியை நளினி தேவி வரவேற்றார்.

ஆங்கிலப் பள்ளி முதல்வர் முகமது இபுராம் ஷா, தமிழ் பள்ளி முதல்வர் ராஜா ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர். கடந்த கல்வி ஆண்டு 10 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவியருக்கு காபத்துல்லா தங்க நாணயம் பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கினார். படிப்பில் சிறந்த மாணவிகள், விளையாட்டு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு ஜமாத் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பரிசு பாராட்டினர். திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியிம் நடைபெற்றது.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!