17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமேஸ்வரத்தில் 25.01.2019ல் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம்..

இராமேஸ்வரத்தில் 25.01.2019ல் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் January 16, 2019, 7:51 am

இராமேஸ்வரம் நகர் திமுக சார்பில் 25.01.2019 (வெள்ளி கிழமை) அன்று மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நாள், பொங்கல் விழா கிராமிய கலை நிகழ்ச்சி மற்றும் பொதுக் கூட்டம் என் எஸ் கே வீதியில் மாலை 5:00 மணி முதல் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கழக தீர்மானக்குழு தலைவரும், முன்னாள் அமைச்சருமான பொன்.முத்துராமலிங்கம், உயர் நிலை செயல்திட்ட குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சுப.தங்கவேலன், மாவட்ட கழக பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர் நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர். நகர் திமுக., செயலாளர் கே.இ.நாசர் கான் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்துள்ளார்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!