18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இலங்கைக்கு கடத்தல் பொருட்களுடன் படகில் தப்ப முயன்ற இருவர் கைது..

இலங்கைக்கு கடத்தல் பொருட்களுடன் படகில் தப்ப முயன்ற இருவர் கைது..

எழுதியவர்: ஆசிரியர் January 15, 2019, 9:04 pm

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோரக் காவல் படை, புலனாய்வு பிரிவு அதிகாரிகள், கியூ பிரிவு ஆகியோர் ஹோவர் கிராப்ட் கப்பலில் சென்று, இன்று (15.01.2019) இராமேஸ்வரம் முதல் தனுஷ்கோடி தெற்கு கடல் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது குந்து கால் இருந்து 7 நாட்டிக்கல் தொலைவில் இலங்கைக்கு சட்ட விரோதமாக படகில் செல்ல முயன்ற மதுரை ஆனையூர் அகதிகள் முகாம் ராஜா (எ) சிவராஜா 41, இவரது தம்பி

அன்பு குமரன்(எ) சின்னதம்பி 38 ஆகியோர் சிக்கினர். இவர்களிடமிருந்து அமெரிக்கா, ஹாங்காங் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. தற்சமயம். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!