18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஏடிஎம் இயந்திரங்களை முழுமையான பயன்பாட்டில் வைக்க உத்தரவு ..

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஏடிஎம் இயந்திரங்களை முழுமையான பயன்பாட்டில் வைக்க உத்தரவு ..

எழுதியவர்: ஆசிரியர் January 15, 2019, 9:03 am

தமிழகம் முழுவதும், பொங்கல் பண்டிகை இன்று துவங்குகிறது. பொங்கலை முன்னிட்டு வங்கிகளுக்கு மூன்று நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து, ஏ.டி.எம்.,களிலும், பணம் முழுமையாக நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து, வங்கி அதிகாரிகள் பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என இன்று (15/01/2019)  முதல் மூன்று நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

இந்த நாட்களில் எப்போதும் பணம் இருக்கும் வகையில், ஏ.டி.எம்.,களில், முழுமையாக நிரப்ப அனைத்து வங்கி கிளைகளுக்கும் நிர்வாகம் உத்தரவிட்டது. இதன்படி தமிழகம் முழுவதும் அனைத்து ஏ.டி.எம்., இயந்திரங்களிலும், நேற்று முழுமையாக பணம் நிரப்பப்பட்டுள்ளன. மேலும் வாடிக்கையாளர்கள் அனைவரும் எந்த நேரத்திலும் பணம் எடுக்கலாம் என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். வாடிக்கையாளர்கள் யாரும் சிரமம் பட தேவையில்லை என்றும் கூறினர். போதுமான அளவிற்கு ஏ.டி.எம்.,களில் பணம் நிரப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

செய்தி:- ஜெ.அஸ்கர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!