18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » விபத்தை ஏற்படுத்திவிட்டு சென்ற ஜே.எஸ்.எஸ்.கே ஆம்புலன்ஸ் வாகனத்தை பறிமுதல் செய்த காவல்துறை ஆய்வாளர்..

விபத்தை ஏற்படுத்திவிட்டு சென்ற ஜே.எஸ்.எஸ்.கே ஆம்புலன்ஸ் வாகனத்தை பறிமுதல் செய்த காவல்துறை ஆய்வாளர்..

எழுதியவர்: ஆசிரியர் January 14, 2019, 4:23 pm

மதுரை பசுமலை அருகே கடந்த 10ஆம் தேதி மதியம் 11 மணி அளவில் திருநகரில் இருந்து இருசக்கர வாகனத்தில் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த உமா மகேஸ்வரி வயது 50 பசுமலை பேருந்து நிறுத்தம் அருகே வரும்போது தமிழ்நாடு அரசு சொந்தமான ஜே எஸ் எஸ் கே அவசர கால ஊர்தி சாதாரணமாக சென்று கொண்டிருந்த பொழுது உமா மகேஸ்வரி மீது வாகனத்தை இடித்து விட்டு நிற்காமல் சென்றது.

இதில் நிலைகுலைந்த உமாமகேஸ்வரி 108 வாகனம் மூலமாக அழகப்பன் நகரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் வாகனத்தை நிறுத்தாமல் சென்ற அந்த வாகனத்தை கண்டுபிடிக்க மதுரை திடீர் நகர் விபத்து புலனாய்வு காவல்துறையிடம் புகார் செய்யப்பட்டது.  இதுகுறித்து சாதாரண காயம் என எண்ணாமல் மிகச் சிறப்பாக செயல்பட்ட ஆய்வாளர் சார்பு திருமதி பாண்டீஸ்வரி மற்றும் காவலர்கள் திரு.பால்பாண்டி மற்றும் திரு.ஆறுமுகம் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு அந்த பகுதியில் உள்ள சிசிடிவியில் சுமார் இரண்டு நாட்கள் ஆய்வு செய்த பிறகு இதை மோதியது அரசாங்க வாகனம் என  முடிவு செய்யப்பட்டது.  அரசாங்க வாகனம் என தெரிந்தும் துணிச்சலுடன் நடவடிக்கை எடுத்து வாகனத்தை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தார். துரிதமாக துணிச்சலுடன் நடவடிக்கை எடுத்த துணை ஆய்வாளர் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!