17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆண்டிப்பட்டி எஸ்.கே.ஏ பள்ளி ஆண்டு விழா…

ஆண்டிப்பட்டி எஸ்.கே.ஏ பள்ளி ஆண்டு விழா…

எழுதியவர்: ஆசிரியர் January 13, 2019, 9:14 am

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள எஸ் கே எ. பள்ளியின் ஆண்டு விழா பள்ளியின் தாளாளர் எஸ் கே பி.வஜ்ரவேல் அவர்களது தலைமையிலும் பள்ளியின் முதல்வர் சாந்தி வஜ்ரவேல் அவர்களது முன்னிலையிலும் நடைபெற்ற இந்த விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் அவர்கள் தொடங்கி வைத்தார்.

பள்ளியின் 29 வதுஆண்டு விழாவின் சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குனர் லெனின் பாரதிஅவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்பொழுது படிக்கும் காலங்களில் இதுபோன்ற விழாக்கள் நடைபெற்று இல்லை என்றும் இது போன்ற விழாக்களில் கலந்து கொள்வது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் தற்போது அரசுகொண்டு வந்துள்ள பிளாஸ்டிக் பொருட்களை தடை அறிவிப்பு நாம் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் அந்த அறிவிற்பினை வரவேற்போம் என்றும் கூறினார்.

தேனிக்கும் தமக்கும் நிறைய தொடர்பு உள்ளது என்றும் மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படத்தை நம் தேனி ஏரியாவில் எடுக்கப்பட்டது என்றும் அதிலிருந்து தேனீக்கும் நமக்கு நிறைய தொடர்புகள் இருக்கிறது என்றும் இயற்கை வளங்களை நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்தினை நாமும் இயற்கை வளங்களை பாதுகாத்திட வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் இப் பள்ளியில் சிறப்பாக கல்வி, விளையாட்டு மற்றும் நடனங்களில் சிறந்து விளங்கிய மாணவ மாணவிகளுக்கும், சிறப்பாக பணியாற்றிறிய ஆசிரியர்களுக்கும், பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். பரிசளிப்பு விழாவை தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் சுமார் 250-க்கும் மேற்பட்டோர் சிறப்பாக நடனங்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் எஸ்.கே.ஏ மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ,ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவ மாணவிகள் பள்ளி ஆசிரியர்கள் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனார்கள்.

செய்தி:- பால்பாண்டி, தேனி

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!