17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட உடல் அடையாளம் காணப்பட்டது…

இராமநாதபுரத்தில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட உடல் அடையாளம் காணப்பட்டது…

எழுதியவர்: ஆசிரியர் January 10, 2019, 5:10 am

இராமநாதபுரம் வண்டிக்காரத் தெருவைச் சேர்ந்தவர் சுதாகர், 47. இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மாத, வார இதழ், செய்தித்தாள் முகவராக இருந்தார். இந்நிலைபில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் இவரது தாயார் இறந்து போனார். தாயார் இறந்த சோகத்தில் இருந்த சுதாகர் ஜன., 6 ஆம் தேதி மதியம் வீட்டிலிருந்து மாயமானார். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க இயலாமல் போனது. இது தொடர்பாக வாட்ஸ் ஆப்பில் தகவல் பரவியது.

இந்நிலையில் நகராட்சி அலுவலகம் செல்லும் வழியில் உள்ள 10 லட்சம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டியில் அவரது உடல் அழுகிய நிலையில் கிடந்தது. நகராட்சி ஊழியர் தகவல் அடிப்படையில் தீயணைப்பு வீரர்கள் சுதாகர் உடலை மீட்டனர். அவரது வலது கை அறுக்கப்பட்டு இருந்தது. கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் பஜார் போலீசார் விசாரித்து வருகின்றனர். இறந்து சில நாட்களான அவரது உடல் தண்ணீரில் கிடந்ததால் மாசு கலந்த குடிநீரை பயன்படுத்த வேண்டாம் என நகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்…

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!