18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பள்ளியின் புதிய மன்றத்தை திறக்க வைத்து முன்னாள் மாணவியை கவுரவித்த கீழக்கரை முகைதீனியா பள்ளி நிர்வாகம்…

பள்ளியின் புதிய மன்றத்தை திறக்க வைத்து முன்னாள் மாணவியை கவுரவித்த கீழக்கரை முகைதீனியா பள்ளி நிர்வாகம்…

எழுதியவர்: ஆசிரியர் January 9, 2019, 7:32 pm

கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா தரமான கல்வி மட்டுமல்லாது மாணவர்களின் பிற செயல்பாடுகளையும் ஊக்குவிப்பதிலும் சிறந்து விளங்குகிறது.  அதன் வரிசையில் இன்று (09/01/2019) பள்ளியின் புதிய அரங்கத்தை (Auditorium) 2016-2017ம் ஆண்டு 12ம் வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்த கீழக்கரை இந்தியன் ஸ்டோர்ஸ் அப்துல் சமுது மகள் ஃபஹிமுன் நிசா என்ற மாணவியை முன்னிலைப்படுத்தி அம்மாணவியை வைத்து புதிய அரங்கை திறக்க வைத்து அம்மாணவியை கௌரவபடுத்தியுள்ளது பள்ளி நிர்வாகம்.

இந்த நிகழ்வின் போது பள்ளியின் தாளாளர் மௌலா முகைதீன், பள்ளி கல்வி குழு துணை தலைவர் MMS.முகைதீன் இபுராஹீம், செயற்குழு உறுப்பினர் ரஃபீக் சாதிக், மாணவியின் தந்தை அப்துல் சமது,  அது ணை செயலாளர் சாதிக், பொருளாளர் சேகு பசீர் அஹமது, அருமை ஆசிரியர் சேகு சஹ்பான் பாதுஷா, தமிழ் ஆசிரியர் ரகுநாத சேதுபதி, டாக்டர் ராசிக்தீன் மற்றும் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!