18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் தன்னார்வ இரத்த தான் முகாம்..

முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் தன்னார்வ இரத்த தான் முகாம்..

எழுதியவர்: ஆசிரியர் January 9, 2019, 6:17 pm

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் நாட்டு நலப் பணித்திட்டம் சார்பாக இரத்த தான சிறப்பு முகாம் கல்லூரி முதல்வர் முனைவர் அப்பாஸ் மைதீன் தலைமையிலும், கல்லூரி டீன் முனைவர் முஹம்மது ஜஹாபர் முன்னிலையிலும் நடைபெற்றது.

கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மீரா முகைதீன் அனைவரையும் வரவேற்றார். மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையிலிருந்து மருத்துவர் சேதுராமன் அவர்களின் குழுவினர் மருத்துவர் விஜயராஜன் மற்றும் மருத்துவர். சங்கீதா அவர்கள் இரத்த தான சிறப்பு முகாமினை துவக்கி வைத்து இரத்த தானம் செய்ய முன்வந்த கல்லூரி மாணவர்களை பாராட்டியும் இரத்த தானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் விளக்கினார்.

மேலும் நாட்டு நல பணித்திட்டத்தின் கீழ் மாணவர்கள் அனைவரும் சமுதாய வளர்ச்சிக்கு பாடுபட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். மதுரை மீனாட்சி மிஷன் இரத்த வங்கி மேலாளர் ரவி மற்றும் மருத்துவக் குழு கல்லூரி மாணவர்கிடையே 101 யூனிட் இரத்தங்களை சேகரித்தனர்.இறுதியாக நன்றியுரை நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் பூபாலன் வழங்கினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!