17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » இராமநாதபுரத்தில் அழுகிய நிலையில் ஆண் உடல் மீட்பு..

இராமநாதபுரத்தில் அழுகிய நிலையில் ஆண் உடல் மீட்பு..

எழுதியவர்: ஆசிரியர் January 9, 2019, 11:59 am

இராமநாதபுரத்தின் பிரதான பகுதிகளில் மதுரை – இராமநாதபுரம் இடது ஓரம் நகராட்சிக்கு சொந்தமான 10 லட்சம் கொள்ளளவு குடிநீர் மேல்நிலை தொட்டி உள்ளது. இங்கு இன்று காலை துர்நாற்றம் வந்தது. இதன்படி, நகராட்சி பணியாளர்கள் குடிநீர் தொட்டியை பார்த்தனர். அங்கு சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் அழுகிய நிலையில் மிதந்தது. இதையடுத்து ராமநாதபுரம் தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை மீட்டனர். அவரது வலது கை கத்தியால் அறுக்கப்பட்டிருந்தது.

இச்சம்பவம் நடந்து ஒரு வாரம் இருக்கலாம் என கூறப்படுகிறது. கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் பஜார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!