18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொக்கு வேட்டை 4 பேருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்..

கொக்கு வேட்டை 4 பேருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்..

எழுதியவர்: ஆசிரியர் January 8, 2019, 1:46 pm

இராமநாதபுரம் வனச்சரகர் சதீஷ் தலைமையில் வனவர் மதிவாணன், வனக்காப்பாளர் கோவிந்தராஜ் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் கடந்த சில நாட்களாக மாலை வேளைகளில் கொழுவூர் பகுதியில் திடீர் ரோந்து சென்றனர். அப்போது தேர்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் பறவைகளை வேட்டையாடி கொண்டிருந்த 4 பேர் இரு சக்கர வாகனங்களுடன் பிடிபட்டனர்.

இவ்விசாரணையில், தேவிப்பட்டினத்தை சேர்ந்த அம்மா சி மகன் பாண்டிச்சாமி, முனியாண்டி மகன் கோட்டை , கணேசன் மகன் புல்லாணி, செல்லையா மகன் முருகன் ஆகியோர் கொக்குகளை வேட்டையாடியது தெரிந்தது. இவர்களிடமிருந்து கொக்குகள், கவண் , கம்பிச்சுருள், இரண்டு இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். ஒவ்வொருவருக்கும் தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.20 ஆயிரம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!