17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கடையநல்லூரில் ஊரின் மையப்பகுதியில் தாலுகா அலுவலகத்தை அமைத்திட அனைத்து கட்சிகள் உண்ணாவிரதப் போராட்டம்..

கடையநல்லூரில் ஊரின் மையப்பகுதியில் தாலுகா அலுவலகத்தை அமைத்திட அனைத்து கட்சிகள் உண்ணாவிரதப் போராட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் January 6, 2019, 12:04 am

கடையநல்லூர் தாலுகா அலுவலகம் புதிய கட்டிடம் நகரின் மையப் பகுதியில் அமைத்திட வலியுறுத்தி அனைத்து கட்சிகளின் சார்பில் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கர் எம்.எல்.ஏ தலைமையில் 05-01-19 இன்று காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

உண்ணாவிரத போராட்டத்தில் இப்பகுதியில் உள்ள அனைத்து கட்சிகள்,வியாபார வர்த்தக சங்கங்கள்,சமூக நல அமைப்புகள் என அனைவரும் பங்கேற்று ஊரின் மையப்பகுதியில் தாலுகா அலுவலகம் அமைத்திட வலியுறுத்தினர்.

முன்னதாக இதே கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு கட்சிகள் அமைப்புகள்,சங்கங்கள்,பொதுமக்கள் சார்பில் பல போராட்டங்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய தாலுகா அலுவலக கட்டிடம் ஊரின் மையப்பகுதியில் அமைத்திட வேண்டும் என்பது இப்பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக உள்ளது.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!