18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாப்பாரப்பட்டியில் துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறையால் சுத்தமின்றி கிடக்கும் கழிவறை..

பாப்பாரப்பட்டியில் துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறையால் சுத்தமின்றி கிடக்கும் கழிவறை..

எழுதியவர்: ஆசிரியர் January 5, 2019, 5:44 pm

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பேருந்து நிலையம் அருகில் பொதுக்கழிப்பிடம் உள்ளது பேருந்து நிலையத்திற்கு தினந்தோறும் வெளி ஊர்களில் இருந்தும் கிராமங்களிலிருந்தும் பயணிகள்  ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர். பேரூராட்சியில் கட்டுப்பாட்டில்  வரும் இந்த கழிவறை சுத்தமின்றி கிடைக்கின்றது இதனால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் கழிவறை உள்ளே போவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். ஒரு சில நபர்கள் அடங்க முடியாமல் சிறுநீர் போகக்கூடிய சூழ்நிலை ஏற்படுகின்றது. இதனால் சுத்தமில்லா கிடைக்கும் கழிவறைகள் பயணிகள் பயன்படுத்துவதனால் மக்களுக்கு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. உடனடியாக பாப்பரப்பட்டி பேரூராட்சி கவனத்திற்கொண்டு கழிவறைகளை தினந்தோறும் சுத்தம் செய்யவேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

செய்தி:- சிங்காரவேலு, தர்மபுரி

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!