17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் வேலை வாய்ப்பு அலுவலத்தில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு நாளை பயிற்சி வகுப்பு தொடக்கம்..

வேலூர் வேலை வாய்ப்பு அலுவலத்தில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு நாளை பயிற்சி வகுப்பு தொடக்கம்..

எழுதியவர்: ஆசிரியர் January 5, 2019, 2:27 am

வேலூர் வேலை வாய்ப்பு அலுவலத்தில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு நாளை பயிற்சி வகுப்பு தொடக்கம். இது தொடர்பாக  வேலூர் கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : வேலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் நிலை 3 மற்றும் நிலை 4 ஆகிய* *தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நாளை தொடங்குகிறது. இந்த வகுப்புகள் வார நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது. இப்பயிற்சி வகுப்புகள் திறமையான பயிற்சியாளர்களை கொண்டு நடத்தப்பட உள்ளது.

இந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தாம் தேர்வுக்கு விண்ணப்பித்த விவரங்கள் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகிபயன்பெறலாம், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

செய்தி:- கே.எம்.வாரியார், வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!