18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » கீழக்கரையில் புதிய உதயம் “WELLNESS PHYSIO CENTRE”..

கீழக்கரையில் புதிய உதயம் “WELLNESS PHYSIO CENTRE”..

எழுதியவர்: ஆசிரியர் January 4, 2019, 11:06 pm

கீழக்கரையில் இன்று (04/01/19) “WELLNESS PHYSIO CENTRE” என்ற ஆரோக்கிய நிலையம் டாக்டர் ஹாசிம் திறந்துள்ளார்.  டாக்டர் ஹாசிம் ஏற்கனவே குழந்தைகள் மருத்துவத்தில் தரமான மற்றும் குணமான சேவைக்காக பெற்றோர்கள் மத்தியில் நற்பெயரை பெற்றவர்.  தற்சமயம் அனைவரும், முக்கியமாக முதுமை காரணமாக ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் இந்த WELLNESS PHYSIO CENTRE திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையத்தினை டாக்டர் ஹாசிமின் தந்தை ஹாஜா நஜுமுதீன் திறந்து வைத்தார். இத்திறப்பு விழாவில் கீழக்கரை முக்கிய பிரமுகர்கள், ஜமாத்தார்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்

இந்த நிலையத்தில் வெல்னஸ் இரத்த பரிசோதனை நிலையமும் இணைந்துள்ளது.  இங்கு அனைத்து பரிசோதனைகளும் உலக தரத்தில் செய்யும் வகையில் உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இங்கு உடல். ரீதியான அனைத்து பிரச்சினைகளுக்கும் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது.

மேலும் வயது முதிர்ந்தவர்களின் நலன் கருதி, நேரடியாக வீட்டிற்கே வந்து சிகிச்சை அளிக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமான மேல் விபரங்களுக்கு 90259 38343 என்ற அலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!