17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருச்சி விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட தங்க நகைகள் பறிமுதல்..

திருச்சி விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட தங்க நகைகள் பறிமுதல்..

எழுதியவர்: ஆசிரியர் January 4, 2019, 10:44 pm

திருச்சி விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட ஆறரை லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து வந்திறங்கிய பயணிகளிடம் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த அல்லா பிச்சை என்பவர் உடைமைகளில் 210 கிராம் எடை கொண்ட தங்க சங்கிலி, 2 ஜோடி வளையல் ஆகியவற்றை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

பின்னர் ஆறு லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடத்தலில் ஈடுபட்ட நபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தி:- அஹமது, தூத்துக்குடி

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!