18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கூட்டாளி கொலைக்கு பழி வாங்க வீச்சு தினேஷ் காரில் குண்டு வீசினோம் ரவுடி வசூர் ராஜா வாக்குமூலம்…

கூட்டாளி கொலைக்கு பழி வாங்க வீச்சு தினேஷ் காரில் குண்டு வீசினோம் ரவுடி வசூர் ராஜா வாக்குமூலம்…

எழுதியவர்: ஆசிரியர் January 4, 2019, 10:33 pm

வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் தினேஷ் என்கிற வீச்சு தினேஷ் (35). இவர் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய வழக்கில் சத்துவாச்சாரி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையில் வீச்சு தினேஷ் ஜாமீனில் வெளியே வந்தார் அப்போது 6 பேர் கொண்ட கும்பல், தினேஷ் சென்ற கார் மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயற்சித்தது. இது குறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்தனர். விசாரணையில் ரவுடி வசூர் ராஜா கூறியதன்பேரில் வெடி குண்டு வீசியதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் சத்துவாச்சாரியில் வழிப்பறி வழக்கு விசாரணைக்காக திருச்சி சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டு ரவுடி வசூர் ராஜா வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார், அப்போது பாகாயம் போலீசார் வெடி குண்டு வீசிய வழக்கில் விசாரிக்க ஒருநாள் கஸ்டடி கேட்டு மனு தாக்கல் செய்தனர் அதன்பேரில் ஒருநாள் கஸ்டடி வழங்கப்பட்டது. இதையடுத்து வசூர் ராஜா விசாரணையில் தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

எனது கூட்டாளி பிச்சை பெருமாளை கொலை செய்த தற்காக பழி வாங்க நினைத்தேன் எனவே கொலைக்கு காரணமான வீச்சு தினேஷை கொல்ல திட்டமிட்டு வெடிகுண்டு வீச ஆட்களை அனுப்பினேன்’ என கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

செய்தி:- கே.எம். வாரியார், வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!