17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் சித்த மருத்துவ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை..

இராமநாதபுரம் சித்த மருத்துவ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை..

எழுதியவர்: ஆசிரியர் January 4, 2019, 6:11 pm

இராமநாதபுரம் மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம் உள்ளது. இங்கு மாவட்ட சித்த மருத்துவ அலுவலராக பார்த்திபன் உள்ளார். இந் நிலையில் ராமநாதபுரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர்கள் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் பார்த்திபனுக்கு புத்தாண்டு, பொங்கல் பரிசு வழங்குவதாக தகவல் கிடைத்தது.

இதன்படி லஞ்ச ஒழிப்பு துறை டி. எஸ்.பி., உன்னி கிருஷ்ணன், கள புலனாய்வு அலுவலர் ஷேக் முகைதீன், இன்ஸ்பெக்டர்கள் பீட்டர், வானதி தலைமையில் போலீசார் மாவட்ட சித்த மருத்துவ அலுவலகத்தில் சோதனை நடத்தினர். சோதனையில் ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ அலுவலர்களிடம் இருந்து பெற்றுக் கொண்ட புத்தாண்டு பரிசு பொருட்கள் தங்ககாசு, கை காப்பு, வெள்ளி பொருட்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரித்த வருகின்றனர்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!