18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி பகுதியில் கோவிலில் சாமி கண் திறந்ததாக பரபரப்பு..

காட்பாடி பகுதியில் கோவிலில் சாமி கண் திறந்ததாக பரபரப்பு..

எழுதியவர்: ஆசிரியர் January 4, 2019, 6:02 pm

காட்பாடி செங்குட்டையில் மிகவும் பழமைவாய்ந்த மாரியம்மன் ஆலயத்தில் மாரியம்மன் திடீரென கண் திறந்ததால் பரபரப்பு தகவல் தீ போல் பரவியதால் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து சாமிதரிசனம்.

வேலூர் மாவட்டம் காட்பாடி செங்குட்டை பஜனை கோவில் தெருவில் மிகவும் பழமைவாய்ந்த அருள் மிகு ஸ்ரீமாரியம்மன் ஆலயம் உள்ளது இந்த மாரியம்மன் ஆலயத்தில் தினந்தோறும் வழிபாடுகள் நடைபெற்று வருவது வழக்கம் இன்று ஆலயத்தில் வழிபாடு நடத்த பார்த்த போது மாரியம்மன் சிலை கண் திறந்து இருந்தது இதனை பார்த்த பொதுமக்கள் பக்தி பரவசத்துடன் சாமிதரிசனம் செய்தனர் அம்மன் கண் திறந்த தகவல் காட்டுத்தீபோல் பரவியதால் கூட்டம் கூட்டமாக பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் வந்து அம்மனை பார்த்து தேங்காய்களை உடைத்தும் சூடம் ஏற்றியும் வழிபாடு செய்தனர் திடீரென அம்மன் கண்திறந்ததாக கூறி மக்கள் கூட்டம் ஆலயத்தில் கூடியதால் பரபரப்பு காணப்பட்டது.

செய்தி:- கே.எம். வாரியார், வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!