18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக 20,000 க்கும் மேற்பட்ட நெல்மூட்டைகள் தேக்கம்!

அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக 20,000 க்கும் மேற்பட்ட நெல்மூட்டைகள் தேக்கம்!

எழுதியவர்: ஆசிரியர் January 3, 2019, 7:11 pm
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அரசின் நெல்கொள்முதல் நிலைய அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக, 20 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட நெல்மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
கோட்டூர் அருகே உள்ள வடக்கு வாட்டார், தெற்கு வாட்டார், புத்தூர், செல்லத்தூர், நல்லூர், வளச்சேரி, உள்ளிட்ட 100-க்கு மேற்ப்பட்ட கிராமங்களில், சம்பா சாகுபடி நெல் அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது.  இந்த நெல்களை கொள்முதல் செய்வதற்குரிய மையங்கள் இதுவரை திறக்காததால், பாதுகாப்பற்ற முறையில் வயல்வெளிகளிலும், தெருக்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
இதனையடுத்து அனைத்து பகுதிகளிலிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க சம்பந்தபட்ட அமைச்சர்  நடவடிக்கை எடுக்க  வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி:- அஹமது, தூத்துக்குடி
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!