17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » நிகழ்வுகள் » *விடுதலை சிறுத்தைகள் கட்சி இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் அறிமுக கூட்டம்.*

*விடுதலை சிறுத்தைகள் கட்சி இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் அறிமுக கூட்டம்.*

எழுதியவர்: ஆசிரியர் March 5, 2017, 6:29 pm

இராமநாதபுரம் மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உள் பிரிவான இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் மாவட்ட துணை அமைப்பாளராக செய்யது யாசீன் சில நாட்களுக்கு முன் மாநில தலைவரால் நியமிக்கப்பட்டார்.

கட்சியின் சார்பாக அறிமுக கூட்டம் இன்று மாவட்ட அமைப்பாளர் ரியாஸ் கான் தலைமையில் கீழக்கரையில் நடைபெற்றது.

அறிமுக கூட்டத்தில் கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர் செயலாளர் முகைதீன் இப்ராகீம் வரவேற்பு ஆற்றினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மண்டல செயலாளர் முகம்மது யாசீன்,மாவட்ட செயலாளர் ஜகுபர் சாதீக்,மாவட்ட துணைச்செயலாளர் அக்பர் அலி,மண்டபம் ஒன்றிய செயலாளர் ஜகுபர் சாதீக்,பாமன் ஒன்றிய செயலாளர் முத்து வாப்பா கட்சியின் கொள்கை பற்றி விளக்க உரை ஆற்றினார்கள்

கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் கீழக்கரை நகர் செயலாளர் யூசுப், கட்சியின் உறுப்பினர்கள் கஃபதுல்லாஹ்,ஜகுபர் சாதீக்,நெய்னா அசாருதீன், நிரோஸ், கபீர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிறைவில் இஸ்லாமிய ஜனநாயக பேரவையில் பொறுப்பேற்ற செய்யது யாசீன் நன்றியுரை ஆற்றினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!