17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பல்கலைகழகங்களுக்கு இடையே மாநில பளுதூக்கும் போட்டி வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சாம்பியன்..

பல்கலைகழகங்களுக்கு இடையே மாநில பளுதூக்கும் போட்டி வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சாம்பியன்..

எழுதியவர்: ஆசிரியர் December 30, 2018, 4:55 pm

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பல்கலைக்கழகங்களுக்கு இடையே மாநில அளவிலான பளுதூக்கும் போட்டி வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள பளு தூக்கும் பயிற்சி மையத்தில் நடந்தது.

இப்போட்டியில் 9-பல்கலைகழகத்திலிருந்து 70-க்கும் மேற்பட்ட ஆண் – பெண் வீரர்கள் கலந்து கொண்டனர். இதில்  சாம்பியன் பட்டத்தை வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் பெற்றது. இதில் வெற்றி பெற்றவருக்கு  கேடயம் மற்றும் சான்றை திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர் பெருவழுதி வழங்கினார். இந்நிகழ்வில் பல்கலைக்கழக உடற்பயிற்சி இயக்குநர் சையத் சபீ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வேலூரிலிருந்து கே.எம்.வாரியார்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!