17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டையில தாயையும் மகளையும் கடத்திய ஆட்டோ டிரைவருக்கு போலீஸ் வலை வீச்சு!

நிலக்கோட்டையில தாயையும் மகளையும் கடத்திய ஆட்டோ டிரைவருக்கு போலீஸ் வலை வீச்சு!

எழுதியவர்: ஆசிரியர் December 29, 2018, 9:52 pm

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே அப்பாவு பிள்ளைட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் வயது 44. இவர் தச்சு வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்.. இந்நிலையில் இவரது மகள் ராசாத்தி பெயர் மாற்றப்பட்டுள்ளது. ராசாத்தி நிலக்கோட்டையில் ஒரு தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இவரை தினம்தோறும் ஆட்டோவில் ஏற்றி பள்ளிக்கு விடுவதற்கு வந்த தோப்பு பட்டியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாலமுருகன் வயது 43 என்பவருக்கும் ராஜேந்திரன் மனைவி முத்துலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இதனைத் தொடர்ந்து முத்துலட்சுமி, ராசாத்தியும் இரண்டு பேர்களையும் கடத்தியதாக நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் ராஜேந்திரன் புகார் கொடுத்தார்.

இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டர் ராஜி வழக்குப்பதிவு செய்து கடத்தி சென்ற ஆட்டோ டிரைவர் பாலமுருகன், முத்துலட்சுமி, ராசாத்தி ஆகிய மூன்று பேர்களையும் வலைவீசி தேடி வருகிறார். பள்ளி மாணவியும, பள்ளி மாணவியின் தாயையும் ஆட்டோ டிரைவரை கடத்திய சம்பவம் நிலக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்தி:- நிலக்கோட்டை: ராஜா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!