17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை நகராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது..

கீழக்கரை நகராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது..

எழுதியவர்: ஆசிரியர் December 28, 2018, 10:59 pm

தமிழக அரசு வருகின்ற 01.01.2019 முதல் மாநிலம் முழுதும் முழுமையான  பிளாஸ்டிக் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இச்சட்டத்தை மீறுபவர்கள் மீது கடுமையான தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.  இது சம்பந்தமாக கீழக்கரை நகராட்சியில்அலுவலக வளாகத்தில்  இன்று ( 28.12.18.) காலை 11.30 மணி அளவில் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய நகராட்சி சுகாதார ஆய்வாளர் பூபதி  “பிளாஸ்டிக் பைக்கு பதிலாக துணியாலான பைகளை வரும் வாடிக்கையாளர்களை கொண்டு வர அறிவுறுத்த வேண்டும், மேலும் அரசாங்கம் வரையறுத்துள்ள விசயங்களை வருகை புரிந்த வியாபாரிகள் மற்றும் அனைவருக்கும் விளக்கி கூறினார்.

மேலும் இது சம்பந்தமாக பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வலியுறுத்தப்பட்டது. தகவல்:-  மக்கள் டீம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!