17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாவட்ட செய்திகள் » செயின் பறிப்பு, கன்னக்களவு வழக்குகளில் சம்பந்தப்பட்ட பிரபல கொள்ளையன் உட்பட ஐவர் கைது..

செயின் பறிப்பு, கன்னக்களவு வழக்குகளில் சம்பந்தப்பட்ட பிரபல கொள்ளையன் உட்பட ஐவர் கைது..

எழுதியவர்: ஆசிரியர் December 28, 2018, 10:41 pm

மதுரை மாநகரில், செயின் பறிப்பு, இரு சக்கர வாகன திருட்டு மற்றும் இரவு நேரங்களில் வீடுகளை உடைத்து கன்னக்களவு செய்துவரும் நபர்களை பிடிப்பதற்கு மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம், இ.கா.ப உத்தரவுப்படி சி.சி.டிவி பதிவுகளை வைத்து விசாரணை மேற்கொண்டதில் திருடிய நபர்கள் 1) ரவி என்ற ரவிச்சந்திரன் 42/2018, த/பெ சோலை சேர்வை, சிக்கந்தர் சாவடி, மதுரை 2) பாபு ஆறுமுகம் 42/18, த/பெ பாலகிருஷ்ணன், எண்: 3/624, குத்துக்கல்தெரு, பரமக்குடி, ராமநாதபுரம் மாவட்டம் 3) பாண்டியராஜன் என்ற ஒத்தக்கண் பாண்டியராஜன் 38/18, த/பெ நாகராஜ், பர்மா காலனி, தனக்கன்குளம், மதுரை. 4) லெட்சுமணன் என்ற தழும்பு 29/18, த/பெ மனோகரன் ஜெய்ஹிந்துபுரம், மதுரை ஆகியோர்கள் என விசாரணையில் தெரியவந்தது.

எனவே சுப்பிரமணியபுரம் (கு.பி) காவல் நிலைய ஆய்வாளர் திரு.முருகதாசன் அனைவரையும் கைது செய்தார். மேலும் ரவிச்சந்திரன் மீது ஒன்பது மாவட்டங்களில் 83 செயின் பறிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளது. மற்ற மூன்று நபர்களும் ரவிச்சந்திரனுக்கு உதவியாக இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் நான்கு நபர்களின் வாக்குமூலத்தில் திருடிய நகைகளை மதுரை மாநகரில் திருட்டு நகைகளை வாங்கி விற்பனை செய்து வரும் சந்தீப் 29/18, த/பெ மகாதேவ், எண்: 32, கீழசெட்டியதெரு, தெற்காவணி மூலவீதி, மதுரை என்பவரிடம் விற்பணை செய்ததாக தெரிவித்தார்கள் எனவே அவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 6 வழக்குகளில் தொடர்புடைய சுமார் 158 பவுன் தங்க நகைகள், திருடிய இரண்டு இரு சக்கர வாகனங்கள், சம்பவத்திற்கு பயன்படுத்திய இரண்டு கத்திகள், எட்டு செல்போன்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!