18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டையில் அரசு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்..வீடியோ..

நிலக்கோட்டையில் அரசு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்..வீடியோ..

எழுதியவர்: ஆசிரியர் December 28, 2018, 10:24 pm

இன்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பாக ஏற்கனவே வழங்கப்பட்ட ஊக்கத்தொகையை வழங்க வேண்டும், மத்திய அரசுக்கு இணையான போனஸ் தொகை வழங்க வேண்டும், காலமுறை ஊதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கு 3000 கருணை தொகையை வழங்க வேண்டும்.

என்று இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரும் நிலையில், இதே கோரிக்கையை வலியுறுத்தி இன்று திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டாரத் தலைவர் முருகேசன் தலைமையில். முன்னிலை சீனிவாசன் மாவட்ட துனைத் தலைவர், மாவட்ட செயலாளர் முபாரக்அலி அவர்கள் சிறப்புறை வழங்கினார்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இதில் 60-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர். மேலும் போனஸ் மற்றும் நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.

நிலக்கோட்டை தாலுகா செய்தியாளர் ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!