18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேனியில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்..: அமைச்சர்கள் பங்கேற்பு..வீடியோ..

தேனியில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்..: அமைச்சர்கள் பங்கேற்பு..வீடியோ..

எழுதியவர்: ஆசிரியர் December 24, 2018, 12:56 pm

தேனி ஆண்டிபட்டியில் சட்ட மன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான அ.தி.மு.க செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் ஒன்றிய செயலாளர் லோகிராஜன் தலைமையிலும் மாவட்ட செயலாளர் சையது கன், பார்த்திபன் M.P, ஜக்கையான் MLA, மாவட்ட துணைச் செயலாளர் ராமர், ஒன்றிய செயலாளர்கள் கொத்தாளமுத்து, RD கணேசன், ஆகியோர் முன்னிலையிலும் நடந்தது.

ஆண்டிபட்டி தொகுதி தேர்தல் பொருப்பாளராக நியமிக்கப்பட்டதுணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள், மேலும்  துணை முதல்வர் பேசிய சிறப்புரையில் வரும் தேர்தலில் ஆண்டிபட்டி தொகுதியில் அ.தி.மு.க சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெருவோம் என்றும் இத்தொகுதில் மாவட்ட மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டு மக்கள் பயன் அடைந்து வருகிறார்கள், அம்மா அவர்கள் மருத்துவமனையில் இருந்த போது தினகரன் புதுச்சேரியில் இருந்தார். கழகத் தொண்டர்கள் அனைவரும் கோவில்களில் அம்மா அவர்கள் குணமடைய சிறப்பு பிரார்த்தனைகள் செய்து வந்தனார்.  எத்தனை தினகரன் வந்தலூம் அ.தி.மு.க வை அழிக்க முடியாது என்றும், அதிமுக எஃகு கோட்டையாக திகழும் என்றும் கூறினர்.

இக்கூட்டத்தில் அம்மா பேரவை மாவட்ட தலைவர் வரதராஜன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினார் ரமாதேவி, மாவட்ட பிரதிநிதி கவிராஜன், ஆவின் இயக்குனார் சரவணன், எ.பட்டி மாயாண்டிமற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனார்.

செய்தி:- பால்பாண்டி, தேனி..

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!