17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேனி பெரியகுளத்தில் பல மாதங்களாக பூட்டி கிடக்கும் ATM மையம் நடவடிக்கை எடுக்க வாடிக்கையாளர் கோரிக்கை…

தேனி பெரியகுளத்தில் பல மாதங்களாக பூட்டி கிடக்கும் ATM மையம் நடவடிக்கை எடுக்க வாடிக்கையாளர் கோரிக்கை…

எழுதியவர்: ஆசிரியர் December 23, 2018, 4:59 pm

பெரியகுளம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிக அளவு வாடிக்கையாளர்களை கொண்ட வங்கியாகும். ஆனால் ஏடிஎம் மையம் இருந்தும் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாத அவலநிலை, ஏனென்றால் வங்கி அருகே உள்ள ஏடிஎம் மையம் பல மாதங்களாக பூட்டி கிடக்கும் கொடுமை. இதனால் வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்காக மாற்று வங்கி ஏடிஎம் மையங்களை தேடி அலையும் நிலைமையை உருவாகியுள்ளது.

இந்த நிலையை மாற்ற  உடனடியாக பெரியகுளம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர்  வாடிக்கையாளர்களை சிரமங்களை மனதில் நினைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவே   வாடிக்கையாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

செய்தி:- பால் பாண்டி, தேனி

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!