17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » நடிகர் கமலஹாசன் மன அழுத்ததில் உள்ளார் – அமைச்சர் கடம்பூர் செ. ராஜு

நடிகர் கமலஹாசன் மன அழுத்ததில் உள்ளார் – அமைச்சர் கடம்பூர் செ. ராஜு

எழுதியவர்: ஆசிரியர் December 23, 2018, 2:51 am
கடம்பூர் காவல் நிலையம் அருகே மற்றும் கோடாங்காலில் புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றிகள் தொடக்க விழா நடந்தது. இதில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு மின்மாற்றிகளை தொடங்கி வைத்து பேசினார்.
இதையடுத்து கயத்தாறில் இருந்து கடம்பூர் இடையே ரூ.8.66 கோடி மதிப்பீட்டில் 8 கி.மீ. தூர சாலை விரிவாக்க பணிகள் துவக்க விழா நடந்தது. தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு பணிகளைத் தொடங்கி வைத்தனர்.
பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறும்போது, தமிழக அரசு அதிகாரிகளை பணி செய்ய வைக்கிறது கடமை. ஆனால் யாருக்கும் அழுத்தம் கொடுப்பது கிடையாது. நடிகர் கமல் அரசியலில் கால் வைத்துவிட்டு மன அழுத்தத்துடன் இருக்கிறார். அதனை அவர் சரி செய்தால் அவருக்கும் நல்லது. அவர்  உடலுக்கும், அவரது நிலைப்பாட்டுக்கும் நல்லது.
திரைப்பட தயாரிப்பாளர் சங்க பிரச்சினை பல மாதங்களாக இருந்து வருகிறது. அங்கு தேர்தல் நடைபெற்று பின்னர், பொதுக்குழுவை கூட்டியபோது, கூட்டம் நடைபெறாமல் பல்வேறு பிரச்சினைகள் நடைபெற்றது. கணக்கு வழக்குகள் சரியில்லை என அவர்களுக்குள் பல மாதமாக பிரச்சினை இருந்து வருகிறது.
நீண்ட கால அவகாசம் இருந்தது. தலைவர் என்ற முறையில் நடிகர் விஷால் முன்னெடுத்து நடுநிலையாளர்களை வைத்து நடிகர் விஷால் பிரச்சினை தீர்த்திருக்கலாம். தேவையில்லாமல் பிரச்சினை ஏற்பட்டு இருக்காது. இது அரசுக்கும் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் பிரச்சினை இல்லை. சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிற நேரத்தில் அரசு தலையிட வேண்டிய நிலை உள்ளது. சங்க கணக்குகள் தொடர்பாக புகார் எழுந்துள்ளது. அதனை அரசு சட்டப்படி ஆராய வேண்டியது கடமை. அந்த நிலைப்பாட்டில்  அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
நடிகர் கமல்ஹாசன் நல்ல மனநிலையில் இல்லை. அவர் விஸ்வரூபம் படத்துக்கு பிரச்சினை வந்தது நாட்டை விட்டே வெளியேறுவேன் என கூறினார். அவரை நாட்டை விட்டு வெளியே போக விடாமல் பிரச்சினையை தீர்த்தது இந்த அரசு தான்.
கடந்த ஆட்சியில் திமுகவை சேர்ந்த ஒரு குடும்ப ஆதிக்கம் மட்டுமே சினிமா துறையில் இருந்தது. ஆனால் இன்று யார் வேண்டுமானாலும் திரைப்படம் எடுக்கலாம் என்ற வெளிப்படை தன்மை உள்ளது, என்றார் அவர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!