18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திண்டுக்கல் மாவட்டம் அரசு இ-சேவை மையத்தில் போதுமான வசதியின்றி மாற்றுத்திறனாளிகள் தவிப்பு…

திண்டுக்கல் மாவட்டம் அரசு இ-சேவை மையத்தில் போதுமான வசதியின்றி மாற்றுத்திறனாளிகள் தவிப்பு…

எழுதியவர்: ஆசிரியர் December 22, 2018, 12:14 pm

தமிழக அரசு அனைத்து அரசு சார்ந்த சான்றிதழ்களையும் இ-சேவை மையம் மூலமாக மட்டுமே வழங்கி வருகிறது. வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட தனி மனிதனுக்கு தேவையான அனைத்து சான்றிதழ்களுக்கும் இ-சேவை மையம் மூலமாகவே விண்ணப்பிக்க முடியும்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்ப்பட்ட இ-சேவை மையங்களில் ஒன்றில் கூட மாற்றுத்திறனாளிகள் எளிதாக வந்து தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை பெறுவதற்கான கைப்பிடியுடன் கூடிய சாய்வுதள வசதிகள் செய்து தரப்படவில்லை.

இதற்கு உதாரணமாக நிலக்கோட்டை ஒன்றியம் விளாம்பட்டியில் செயல்படும் இ-சேவை மையமே ஓர் சான்று. குறிப்பாக அனைத்து இ-சேவை மைய கட்டிடங்களும் மூன்று முதல் ஐந்து படிக்கட்டுகளை கொண்டதாகவே உள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் இல்லாத இ-சேவை மையங்கள் குறித்து பலமுறை இத்துறை தொடர்பான அதிகாரிகளிடம் முறையிட்டும், குறிப்பாக இத்துறைக்கு பொறுப்பான தாசில்தாரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு அனைத்து இ-சேவை மைய கட்டிடங்களிலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்கள் வந்து செல்ல வசதியாக கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் மற்றும் தேவையான வசதிகளை அமைத்து தருமாறு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்,திண்டுக்கல் மாவட்டக்குழு சார்பில் S.பகத்சிங் மற்றும் P.செல்வநாயகம் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!