17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவள்ளுவர் பல்கலை.யில் தேனீ, காளான், பட்டு வளர்ப்பு சான்றிதழ் படிப்புகள் தொடக்கம்….

திருவள்ளுவர் பல்கலை.யில் தேனீ, காளான், பட்டு வளர்ப்பு சான்றிதழ் படிப்புகள் தொடக்கம்….

எழுதியவர்: ஆசிரியர் December 21, 2018, 10:03 am

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக் கழக உயிர் தொழில்நுட்பவியல் துறையும், சென்னையைச் சேர்ந்த தனியார் தேனீ வளர்ப்பு பயிற்சி மையமும் இணைந்து தேனீ, காளான், பட்டு வளர்ப்பு ஆகிய 3 குறுகிய கால சான்றிதழ் படிப்புகளை செவ்வாய்க்கிழமை தொடங்கின.

திருவலத்தை அடுத்த சேர்க்காட்டில் அமைந்துள்ள வேலூர் திருவள்ளுவர் பல்கலைக் கழகம், சென்னையைச் சேர்ந்த தனியார் தேனீ வளர்ப்பு பயிற்சி மையத்துடன் கடந்த 11-ஆம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.

இதன் தொடர்ச்சியாக பல்கலைக் கழக மாணவர்கள் ஆராய்ச்சிக் கல்வியுடன், சுய தொழில் பயிற்சி கல்வியை கற்கும் நோக்கில் பல்கலைக் கழக உயிர் தொழில்நுட்பவியல் துறையும், தேனீ வளர்ப்புப் பயிற்சி மையமும் இணைந்து தேனீ, காளான், பட்டு வளர்ப்பு ஆகிய 3 குறுகிய கால சான்றிதழ் படிப்புகளை செவ்வாய்க்கிழமை தொடங்கின.

இந்நிகழ்ச்சிக்கு, பல்கலைக் கழகத் துணை வேந்தர் க.முருகன் தலைமை வகித்து பயிற்சி வகுப்புகளைத் தொடங்கி வைத்தார். பதிவாளர் வெ.பெருவழுதி வரவேற்றார். உயிர் தொழில்நுட்பவியல் துறை தலைவர் எர்னஸ்ட் டேவிட், பயிற்சி மைய இயக்குநர் பி.வில்லியம் ஜேம்ஸ், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.

வேலூரிலிருந்து கீழை நியூஸ் செய்திகளுக்காக கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!