17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் – கீழக்கரை ரயில்வே மேம்பால பணி தொடக்கம் – மாற்றுப்பாதையில் போக்குவரத்து..

இராமநாதபுரம் – கீழக்கரை ரயில்வே மேம்பால பணி தொடக்கம் – மாற்றுப்பாதையில் போக்குவரத்து..

எழுதியவர்: ஆசிரியர் December 21, 2018, 9:44 am

இராமநாதபுரம் – கீழக்கரை ரயில்வே மேம்பாலம் ரூ.30 கோடியில் கட்டும் பணி துவங்கப்பட்டுள்ளது. இதனால், திருப்புல்லாணி, கீழக்கரை, ஏர்வாடி, சாயல்குடி பகுதிகளில் இருந்து ராமநாதபுரம் நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் பட்டணம்காத்தான் நெடுஞ்சாலை வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருப்புல்லாணி வழியாக இராமநாதபுரம் வரும் வாகனங்கள் அனைத்தும்  ராஜசூரியமடை (RS மடை) வழியாக கிழக்கு கடற்கரை சாலை பிரிவு சென்று பட்டணம்காத்தான் நெடுஞ்சாலை வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!