17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ரோட்டரி சங்கம் சார்பில் அரசு துறையில் சிறப்பாக பணிபுரிந்தோருக்கு சேவை விருது வழங்கும் விழா..

ரோட்டரி சங்கம் சார்பில் அரசு துறையில் சிறப்பாக பணிபுரிந்தோருக்கு சேவை விருது வழங்கும் விழா..

எழுதியவர்: ஆசிரியர் December 21, 2018, 12:38 am

கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் அரசு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்தோருக்கு சேவை விருது வழங்கும் விழா கோவில்பட்டி சௌபாக்யா மஹாலில் வைத்து நடைபெற்றது.

வருடந்தோறும் நகராட்சி, தொலை தொடர்புதுறை, காவல்துறை, போக்குவரத்து துறை, தபால் துறை, ரயில்வே, கல்விதுறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்தோருக்கு ரோட்டரி சங்கம் சார்பில் சேவை விருது வழங்கபட்டு வருகிறது.கோவில்பட்டியில் நடந்த விழாவிற்கு ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் டாக்டர்.சம்பத்குமார் தலைமை வகித்தார்.ரோட்டரி சங்க மாவட்ட தலைவர் விநாயகா ரமேஷ், ரோட்டரி மாவட்ட செயலாளர் வையாலி முத்தையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்கத் தலைவர் ஆசியாபார்ம்ஸ் பாபு அனைவரையும் வரவேற்றார்.ரோட்டரி மாவட்ட ஆளுநர் ராஜகோபாலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்தோருக்கு சேவை விருது மற்றும் சைக்கிள் வீராங்கனைக்கு ரூ.5000ஃ- பரிசு தொகை வழங்கி பாராட்டினார்.விழாவில் ரோட்டரி கருத்தரங்கு தலைவர் முத்தையாபிள்ளை, இந்திய மருத்துவர்கள் சங்க தலைவர் சீனிவாசன், திருநெல்வேலி ரோட்டரி சங்கத் தலைவர் பொன்ராஜ், ரோட்டரி சங்க நிர்வாகிகள் ரத்தன் டாகா, வீராச்சாமி, பத்மநாபன், நாராயணசாமி, ஜெகநாதன், முத்துச்செல்வன், சீனிவாசன், தன்ராஜ்ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ரோட்டரி சங்க செயலாளர் ரவிமாணிக்கம் நன்றி கூறினார்.

செய்தியாளர் :- அஹமது..

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!