18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் கிராம அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பாக உண்ணாவிரதம்…வீடியோ..

இராமநாதபுரத்தில் கிராம அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பாக உண்ணாவிரதம்…வீடியோ..

எழுதியவர்: ஆசிரியர் December 20, 2018, 11:35 am

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், பேரிடர் மேலாண் பணிகளை மேற்கொள்ளும் கிராம நிருவாக அலுவலர்களுக்கு தனி ஊதியம் வழங்க வேண்டும், அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு மின்வசதி, கழிவறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும், 21 மாத ஊதிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலாகள் முன்னேற்ற சங்கத்தினர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன் துவங்கிய உண்ணாவிரதப் போராட்டத்திற்கு  தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் என். செல்வம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் டி.ரவி சங்கர், மாவட்ட துணை செலயாளர் வி.காளிதாஸ், மாவட்ட பொருளாளர் பி.ஜெகநாத பூபதி, மாவட்ட பிரசார அணி செயலாளர் வி.தர்மராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவாடானை வட்ட செயலாளர் எஸ்.ஜேசு அருள் வரவேற்றார். 15 அம்ச கோரிக்கைகள் குறித்து மாவட்ட அமைப்பு செயலாளர் கே.முனீஸ்வரன் விளக்கவுரை பேசினார்.

தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் பழனிக்குமார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட செயலர் கருணாமூர்த்தி உள்பட பலர் பேசினர். மாவட்ட துணைத் தலைவர் எஸ். கண்ணன், வட்டத் தலைவர்கள் கே.மணிகண்டன் (ராமநாதபுரம்), .வி.ராமலிங்கம் (திருவாடானை), ராமநாதபுரம் வட்ட செயலாளர் எஸ். அனுராஜ், துணை செயலானா வி.உதய சூரியா திருவாடானை வட்ட பொருளாளர் எம்.பழனிச்சாமி, ஆகியோர் ஆர்ப்பாட்ட உரை பேசினர்.ராமநாதபுரம் வட்ட பிரசார செயலாளர் எஸ். வைதேகி நன்றி கூறுகிறார்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்..

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!