18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாவட்ட செய்திகள் » வத்தலகுண்டில் மார்கழி மாதம் பிறந்ததால் வாழைக்காய் விலை வீழ்ச்சி..

வத்தலகுண்டில் மார்கழி மாதம் பிறந்ததால் வாழைக்காய் விலை வீழ்ச்சி..

எழுதியவர்: ஆசிரியர் December 19, 2018, 2:56 pm

வத்தலக்குண்டுவில் மார்கழி பிறந்ததால் வாழைக்காய் விலை வீழ்ச்சி அடைந்தது. செவ்வாழை ஒரு தார் ரூ.350க்கு சரிந்தது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு வாழைக்காய் மார்க்கெட்டில் நேற்று மார்கழி மாதம் பிறந்து விட்டதாலும், திருமணம் போன்ற விசேசங்கள் இல்லாததாலும் வாழைக்காய் விலை வீழ்ச்சியடைந்தது. கடந்த வாரம்  செவ்வாழை ஒரு தார் ரூ.600க்கு விலைபோனது நேற்று ஒரு தாய் ரூ.250க்கு வீழ்ச்சி அடைந்தது. அதே போல கடந்த வாரம் ரஸ்தாலி ஒரு தார் ரூ.500ககு விலை போனது நேற்று ஒரு தார் ரூ.300க்கு சரிந்தது. ஒட்டுநாடு கடந்த வாரம் ஒரு தார் ரூ.400க்கு விலைபோனது நேற்று ஒரு தார் ரூ.300க்கு விலை குறைந்தது. கடந்த வாரம் பூவன்வாழை ரூ.350க்கு விலைபோனது நேற்று ஒரு தார் ரூ.250க்கு வீழ்ச்சி அடைந்தது. இதனால் வாழை விவசாயிகள் கவலையடைந்தனர்.

இதுபற்றி வாழை விவசயி மரியலூயிஸ் கூறுகையில் ஏற்கனவே கஜா புயலால் வாழை விவசாயிகள் பாதிக்கப்பட்டோம் இப்போது அதிலிருந்து மீண்டு வாழைக்கு கடன் வாங்கி உரமிட்டு நல்ல முறையி்ல் விளைய வைத்து கொண்டு சென்றால் விலை அதால பாதாளத்திற்கு சென்றுவிட்டது. கொண்டு வந்த வண்டி வாடகையை கூட கட்டாது அரசு இது மாதிரி நேரங்களில் வாழைக்காயை வைத்து விற்க அரசு குளிர்சாதன கிட்டங்கி அமைக்க வேண்டும் என்றார்.

நிலக்கோட்டை தாலுகா செய்தியாளர்,ராஜா

 
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!