17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கோவில்பட்டி அருகே வங்கி பணத்திற்கு பாதுகாப்பிற்கு சென்ற கார் விபத்து – உதவி ஆய்வாளர் உள்பட 2 பேர் காயம்…

கோவில்பட்டி அருகே வங்கி பணத்திற்கு பாதுகாப்பிற்கு சென்ற கார் விபத்து – உதவி ஆய்வாளர் உள்பட 2 பேர் காயம்…

எழுதியவர்: ஆசிரியர் December 18, 2018, 7:18 pm

மதுரையில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏராளமான பணம் எடுத்து கொண்டு வாகனம் புறப்பட்டது. இந்த வாகனத்துக்கு முன்னும், பின்னும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் இருந்த வாகனங்கள் சென்றன. பின்னால் வந்த காரை மார்த்தாண்டைத்தை சேர்ந்த கிறிஸ்துதாஸ் மகன் ஸ்டீபன்(40) என்பவர் ஓட்டினார். அவருடன் கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை உதவி ஆய்வாளர் சங்கர்(53) மற்றும 3 போலீஸார் இருந்தனர்.

கோவில்பட்டியை கடந்து சென்றபோது, பின்னால் வந்த பாதுகாப்பு வாகனம் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவர் மீது ஏறி, அங்கிருந்து கம்பிகளை தாண்டி அந்தரத்தில் நின்றது.

இதையடுத்து மற்ற இரண்டு வாகனங்களும் நிறுத்தப்பட்டன. தகவல் அறிந்து கோவில்பட்டி டி.எஸ்.பி. ஜெபராஜ் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் டிரைவர் ஸ்டீபன், உதவி ஆய்வாளர் சங்கர் ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்கள் இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பின்னர், முன்னால் சென்ற பாதுகாப்பு வாகனத்துடன் பணம் ஏற்றி வந்த வாகனத்தை போலீஸார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தி:- அஹமது, படம்:- சாதிக்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!