17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பெரியகுளம் ஜமா அத்துல் உலமா சபை சார்பில் மீலாது பெருவிழா..வீடியோ..

பெரியகுளம் ஜமா அத்துல் உலமா சபை சார்பில் மீலாது பெருவிழா..வீடியோ..

எழுதியவர்: ஆசிரியர் December 14, 2018, 10:25 pm

தேனி பெரியகுளத்தில், பெரியகுளம் நகர ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் மாபெரும் சீரத்துந் நபி (ஸல்) (மீலாது பெருவிழா) மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு அப்துல் காதிர், (உலவி ஹஜ்ரத், தலைவர், பெரியகுளம் நகர ஜமாஅத்துல் உலமா சபை ) தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர், தேனி மாவட்டம் (ம) பெரியகுளம் நகர ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் நிஜாமுத்தீன் தொகுத்து வழங்க, அஹமது பௌஜீத்தீன், முஹம்மது உமர் அலி, முஹம்மது ஹுஸைன், அப்துர் ரஹ்மான், முஹம்மது அபூபக்கர் சித்திக், அப்துல் அஹது, சையது இஸ்மாயில், சையது யாகூப், முஹம்மது உஸ்மான் அலி,ஆலிம் M அகமது முஸ்தபா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை துணைத் தலைவர் அலாவுத்தீன் துவக்க உரை வழங்கினார்.

“சாத்வீகத்தைப் போதித்த அண்ணல் நபி (ஸல்) ” என்ற தலைப்பில் பேராசிரியர் அப்துல் ஹமீது, (ஜாமிஆ அல்பாக்கியா துஸ் ஸாலிஹாத் அரபிக்கல்லூரி, வேலூர்) மற்றும் “அண்ணலாரின் அறிவார்ந்த அணுகுமுறை” என்ற தலைப்பில் பேராசிரியர் அபூதாஹிர் (நூருல் இஸ்லாம் அரபிக் கல்லூரி .சேலம்) ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள், முஹம்மது இல்யாஸ்தீன் நன்றியுரை கூறினார்.

பெரியகுளம் நகர அனைத்து பள்ளிவாசல்களின் தலைவர்கள், இமாம்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மாநாட்டில் 9 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது கொண்டனர். மாநாட்டில் 9 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

சாதிக்பாட்சா. நிருபர்.தேனி மாவட்டம்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!