17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தூய்மை இந்தியா தூதுவராக நியமிக்கப்பட்ட சிறுமியை வீட்டுக்கு நேரில் சென்று வாழ்த்திய ஆம்பூர் ஆட்சியர்..

தூய்மை இந்தியா தூதுவராக நியமிக்கப்பட்ட சிறுமியை வீட்டுக்கு நேரில் சென்று வாழ்த்திய ஆம்பூர் ஆட்சியர்..

எழுதியவர்: ஆசிரியர் December 14, 2018, 3:58 pm

சமீபத்தில் ஆம்பூரில் ஹனீபாராஜா என்ற சிறுமி தன் வீட்டில் கழிப்பறை வசதி இல்லை என காவல்துறையில் தன் தந்தை மீதே புகார் தெரிவித்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.  பின்னர் அச்சிறுமியின் தைரியத்தை பாராட்டி அச்சிறுமியை ஆம்பூர் பகுதிக்கு தூய்மை இந்தியா திட்டத்தின் தூதுவராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று (14:12/2018) காலை ஆம்பூரில் உள்ள ஹனீபாஜாரா வீட்டிற்கு கலெக்டர் ராமன் நேடியாக சென்றார். அவர் மாணவி ஹனீபாஜாராவை சந்தித்து அவரது செயலையும், துணிச்சலான முடிவையும் பாராட்டினார். ஆம்பூர் நகராட்சி தூய்மை இந்தியா திட்ட தூதுவராக நியமனம் செய்யப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து மாணவிக்கு பரிசு வழங்கினார். பின்னர் மாணவியின் வீட்டில் கட்டப்பட்டு வரும் கழிவறை பணிகளை பார்வையிட்டார்.

கே, எம்.வாரியார்- செய்தியாளர், வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!