17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆர்.எஸ் மங்கலம் யூனியன் ஆபிஸ் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: ரூ.40 ஆயிரத்துடன் ஊராட்சி செயலர் சிக்கினார்…

ஆர்.எஸ் மங்கலம் யூனியன் ஆபிஸ் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: ரூ.40 ஆயிரத்துடன் ஊராட்சி செயலர் சிக்கினார்…

எழுதியவர்: ஆசிரியர் December 13, 2018, 8:25 pm

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ் மங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர். திருப்பாலைக்குடி காந்தி நகர் சண்முகம் என்பவர் தனது நிலத்தில் வீடு கட்டினார். பண நெருக்கடியால் வீடு கட்டும் பணியை கிடப்பில் போட்டார். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அந்த வீட்டை கட்டி முடிக்க வங்கி கடன் வாங்க முடிவு செய்தார். இது தொடர்பாக வீடு கட்டுமான ஒப்புதல் (பிளான் அப்ரூவல்) பெற ஊராட்சி செயலாளர் மாணிக்கத்தை தொடர்பு கொண்டார். அனுமதி வழங்க ஆர் எஸ் மங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலர் (கிராம ஊராட்சிகள்) பச்ச மால் ரூ.1 லட்சம் கேட்பதாக, மாணிக்கம் கூறினார். வரைபட அனுமதி வேலையை துவங்க முன் பணம் கொடுக்குமாறு மாணிக்கம் கேட்டுக் கொண்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சண்முகம் இது குறித்து ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். அதிகாரிகள் ஆலோசனையின் பேரில் ரூ.40 ஆயிரத்தை ஊராட்சி செயலர் மாணிக்கத்திடம், சண்முகம் இன்று (13.12.18) மாலை கொடுத்தார். அப்போது ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி உன்னி கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் ஜானகி, வானதி ஆகியோர் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் , களவுமாக சிக்கினர். ஊராட்சி ஒன்றிய அலுவலர் (கிராம ஊராட்சிகள்) பச்சமால், ஊராட்சி செயலாளர் மாணிக்கம் ஆகியோரிடம் விசாரணை தொடர்கிறது. லஞ்சம் கேட்டது தொடர்பாக கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் ஒருவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தீவிர விசாரணைக்கு பிறகு பச்சமால், மாணிக்கம் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்..

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!