17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் வனத்துறைத்தேர்வு…

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் வனத்துறைத்தேர்வு…

எழுதியவர்: ஆசிரியர் December 13, 2018, 11:09 am

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் வனத்துறை சார்பாக வனவர், வனக்காப்பாளர், வாகன ஓட்டி பணியிடங்களுக்காக முதல்முறையாக ஆன்லைன் தேர்வு கடந்த ஆறு நாட்களாக கல்லூரியின் கணினி பொறியில் துறையில் காலை, மாலை என்று இரண்டு கட்டமாக நடைபெற்றது.

இத்தேர்வில் சுமார் 1200 போட்டியாளர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள். கல்லூரியின் சார்பாக மின்தடையின்றி தேர்வு நடைபெறுவதற்கு ஜெனரேட்டர் வசதி செய்து தரப்பட்டது. தேர்வினை சிறப்பாக நடத்தி தந்ததற்காக வனத்துறை அலுவலகத்தை சார்ந்த மாவட்ட வன அலுவலக கண்காணிப்பாளர் மதிவாணன், கீழக்கரை வனக்காப்பாளர் சிக்கந்தர் பாட்சா, அலுவலக பணியாளர்கள் நர்மதா, லதா, சிபி தொழில்நுட்ப நிறுவனத்தை சார்ந்த அலுவலர்கள் ஹரி மற்றும் சதீஸ் ஆகியோர் கல்லூரி நிர்வாகத்திற்கும், முதல்வர். முனைவர். அப்பாஸ் மைதீன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்கள். மேலும் இத்தேர்வின் ஒருங்கிணைப்பாளர்களாக கணினி பொறியியல் துறையை சார்ந்த சுல்தான் அலாவுதீன் மற்றும் ராஜா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!