17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » ரெகுநாதபுரத்தில் ஐயப்பன் கோவில் ஊஞ்சல் உற்சவம் ..

ரெகுநாதபுரத்தில் ஐயப்பன் கோவில் ஊஞ்சல் உற்சவம் ..

எழுதியவர்: ஆசிரியர் December 8, 2018, 10:43 pm

இராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் வல்லபை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜன., 2வது வாரத்தில் சபரிமலை சென்று மகர ஜோதி தரிசனம் செய்து வருவது வழக்கம். நடப்பாண்டு நவ.17 இல் ஐயப்ப பக்தர்கள் தலைமை பக்தர் மோகன் தலைமையில் ஏராளமானோர் ஆறு வார விரதம் துவக்கினர். இதையொட்டி தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக இன்றிரவு வல்லபை ஐயப்ப கோயில் படி பூஜை மற்றும் ஊஞ்சல் உற்சவம் தலைமை பக்தர் மோகன் தலைமையில் நடந்தது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து ஐயப்பனை தரிசனம் செய்தனர். டி ச., 26ல் மண்டல பூஜை நடக்கிறது.

செய்தி:- முருகன், கீழைநியூஸ், இராமநாதபுரம்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!