17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » பயணிகள் சாமான்கள் கொண்டு செல்லும் முறையில் புதிய விதிமுறை மார்ச் 8ல் இருந்து அமல் – துபாய் சர்வதேச விமான நிலையம் அறிவிப்பு…

பயணிகள் சாமான்கள் கொண்டு செல்லும் முறையில் புதிய விதிமுறை மார்ச் 8ல் இருந்து அமல் – துபாய் சர்வதேச விமான நிலையம் அறிவிப்பு…

எழுதியவர்: Mohamed March 2, 2017, 7:25 pm

துபாயில் இருந்து தாயகம் திரும்பும் பிரயாணிகள் கொண்டு செல்லும் சாமான்கள் கட்டப்படும் பெட்டிகளுக்கு புதிய விதிமுறையை விமான நிலைய நிர்வாகம் அமுல்படுத்த உள்ளது.

புதிய விதிமுறைகளின் படி பிரயாணிகள் தங்கள் பெட்டி கட்டும் முறையை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் மார்ச் 8ல் இருந்து அமுலுக்கு வரவிருக்கிறது.

1. ஒழுங்கற்ற வடிவத்தில் கட்டப்பட்ட பெட்டிகள் அனுமதிக்கப்படாது. 2.அதிக எடை கொண்ட பெட்டிகள் அனுமதிக்கப்படாது. 3.வட்ட வடிவத்தில் கட்டப்பட்ட பெட்டிகள் அனுமதிக்கப்படாது. 4.அனைத்து பெட்டிகளும் தட்டையானதாக இருக்க வேண்டும்.

பெட்டிகளுக்காக உலக தரம் வாய்ந்த அதிநவீன கருவியை துபாய் விமான நிலையம் பயன்படுத்தி வருகிறது. பெட்டிகளை நிர்வகிக்க அதிநவீன முறையை பயன்படுத்துவதால் வட்ட வடிவம், ஒழுங்கற்ற மற்றும் அதிக எடை கொண்ட பெட்டிகளால் ஏற்படும் அசௌகரியங்களை நிவர்த்தி செய்யவே இந்த விதிமுறைகள் பயன்பாட்டிற்கு வருகின்றன.

ஒழுங்கற்ற பெட்டிகளால் ஏற்படும் நெரிசல் காரணமாக பொருட்கள் கொண்டு செல்லும் பெல்டுகள் பழுதடைவதால் ஏற்றப்பட வேண்டிய வேலையில் தாமதம் ஏற்டுவதால் புறப்படும் நேரங்களும் பாதிக்கப்படுகிறது.

விதிமுறைப்படி கட்டப்படாத பெட்டிகள் நிராகரிக்கப்பட்டன. மீண்டும் விதிமுறைப்படி கட்டுவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகை வசூல் செய்யப்படும். கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் தோராயமாக 9.3 மில்லியம் சாமான்கள் கையாளப்பட்டதாக துபாய் விமானநிலையம் அறிவிக்கை தெரிவிக்கிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!