18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக போக்குவரத்து விழிப்புணர்வு கண்காட்சி…

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக போக்குவரத்து விழிப்புணர்வு கண்காட்சி…

எழுதியவர்: ஆசிரியர் December 3, 2018, 9:09 pm

திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 3.12.18 திங்கள் கிழமை திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக போக்குவரத்து விழிப்புணர்வு கண்காட்சி அமைக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் உயர்திரு.வினைய் அவர்கள் காவல்துறை கண்காணிப்பாளர் உயர்திரு.சக்திவேல் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி.சுகாசினி  முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் திரு.வினய் அவர்கள் கண்காட்சியினை துவக்கி வைத்தார்.

இக்கண்காட்சியில் போக்குவரத்து விதிகள் பற்றிய புகைப்படங்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பது குறித்தும் மேலும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. மேலும் சாலை பாதுகாப்பு குறித்து கையொப்பமிட்டு உறுதிமொழி ஏற்றனர். கண்காட்சியில் காவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டனர்.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ், திண்டுக்கல் .

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!