17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி பரிமாற்றத் திட்டம் 2018 – 2019…

கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி பரிமாற்றத் திட்டம் 2018 – 2019…

எழுதியவர்: ஆசிரியர் December 1, 2018, 5:36 pm

தமிழக அரசின் பள்ளிப் பரிமாற்றுத் திட்டத்தின் கீழ் கடலாடி ஒன்றியம் ஆதஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள், கீழக்கரை முள்ளுவாடியில் உள்ள ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வருகைபுரிந்தனர். மாணவர்களையும், ஆசிரியர்கள், சசிகலா, நூருல் வதூதியா ஆகியோரையும் பள்ளித் தலைமையாசிரியர் மு. ஜவஹர் பாரூக் வரவேற்று, இத் திட்டத்தின் சிறப்புகளை எடுத்துரைத்தார். ஆசிரியர்கள் சி. ஆறுமுகம், தக்கலை பீர் முகம்மது, சசிகலா மாணவர்களுக்கு பயிற்சியளித்தனர். மாணவன் முகேஷ்குமார் அன்றைய நிகழ்வுகளைத் தொகுத்துரைத்திட உதவித்தலைமை ஆசிரியர் நாசர் நன்றி கூறினார்.

சிறப்புப் பார்வையாளர்களாக வட்டார வளமைய ஆசிரியர்கள் தமிழ் மலர், வேலுச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். திட்டப் பொறுப்பாளர்கள் ஜாபர்அலி, செய்யது இப்ராகிம் நிகழ்வுக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!