17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமேஸ்வரம் நகராட்சி முறைகேடு கண்டித்து அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் ..

இராமேஸ்வரம் நகராட்சி முறைகேடு கண்டித்து அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் ..

எழுதியவர்: ஆசிரியர் December 1, 2018, 2:32 pm

இராமேஸ்வரம் நகராட்சி நிர்வாக முறைகேடுகளை கண்டித்து அனைத்து கட்சி சார்பில் பேருந்து நிலையம் பகுதியில் கொட்டும் மழையில் இன்று (01.12.18) காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளர் முருகானந்தம் தலைமை வகித்தார். திமுக நகர் பொறுப்பாளர் கே.இ.நாசர் கான், காங்கிரஸ் நகர் தலைவர் ராஜாமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர் செயலாளர் கருணாகரன், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் நகர் செயலாளர் ஜீவா, தேமுக நகர் செயலாளர் முத்து காமாட்சி, நாம் தமிழர் கட்சி நகர் செயலாளர் கண்.இளங்கோ ஆகியோர் பேசினர். இந்து மக்கள் கட்சி நகர் தலைவர் பிரபாகரன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட நிர்வாகி செந்தில், திமுக பொறுப்புக் குழு உறுப்பினர்கள் ஏ.கே.சண்முகம், கார்கிராம், முத்துராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நகராட்சி டிராக்டர் டிரைவர் நாகராஜ் மர்ம மரணத்திற்கான காரணத்தை போலீசார் நடவடிக்கை எடுக்கக் கோரியும், நகராட்சி நிர்வாக நிதி முறைகேடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!