17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » கஜாபுயல் நிவாரண பணியில் கை கோர்த்த இஸ்லாமிய கல்வி நிறுவனம்…

கஜாபுயல் நிவாரண பணியில் கை கோர்த்த இஸ்லாமிய கல்வி நிறுவனம்…

எழுதியவர்: ஆசிரியர் November 29, 2018, 8:15 pm

கீழக்கரை இஸ்லாமியா பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் பள்ளி நிர்வாகத்தினர் ஆகியோர் புயல் நிவாரண பணிக்காக மூன்று லட்சத்திற்கும் அதிகமான நிவாரண பொருள்களை வசூல் செய்தார்கள். வசூல் செய்த நிவாரண பொருள்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு கிளை வசம் நேற்று ஒப்படைத்தார்கள்.

இஸ்லாமியா கல்வி நிறுவனங்கள் வசூல் செய்த நிவாரண பொருள்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் களப்பணியாளர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று கொண்டு சேர்த்தார்கள்.

மேலு‌ம் புயல் பாதிக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அனைத்து கிளைகள் சார்பிலும் கீழக்கரை நகர் முழுவதும் வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் இருந்து நிவாரண பொருட்களாகவும், பொருளாதாரதாகவும்  பெறப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!