17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழ்நாடு சட்டமன்ற உறுதிமொழி குழுவினர் வேலூர் மாவட்டத்தில் ஆய்வு ..

தமிழ்நாடு சட்டமன்ற உறுதிமொழி குழுவினர் வேலூர் மாவட்டத்தில் ஆய்வு ..

எழுதியவர்: ஆசிரியர் November 29, 2018, 7:57 pm

தமிழ்நாடு சட்டமன்ற உறுதி மொழி குழுவினர் வேலூர் மாவட்டத்தில் ஆய்வு செய்தனர். இக்குழுவில் ராதரபுரம் அதிமுக எம்எல்ஏ இன்பத்துரை தலைமையில் 12 பேர் இன்று காலை வேலூர் வந்தனர்.

வேலூர் கோட்டை அருங்காட்சியம், ஜலகண்டேஸ்வரர் கோவில் மற்றும் காட்பாடி காந்தி நகர் வேலூர் மாநகராட்சி முதல் மண்டலம் காந்திநகர் திடக்கழிவு மேலாண்மை மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து பாராட்டினர்.

இந்த திட்டத்தை சிறப்பான முறையில் செயல்படுத்தியதற்காக மாநகராட்சி உதவி ஆணையர் மதிவாணன் சுகாதார அலுவலர் பாலமுருகன் மற்றும் ஊழியர்களை பாராட்டினர். பிறகு மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு ஆய்வுக்கு சென்றனர். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ராமன் தமிழக நெடுஞ்சாலை துறை வேலூர் கோட்ட பொறியாளர் சரவணன்,  முதலாவது மண்டல மாநகராட்சி உதவி ஆணையர் மதிவாணன் சுகாதார அலுவலர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கே.எம்.வாரியார்:- மாவட்ட செய்தியாளர்,வேலூர்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!