17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கோவில்பட்டி ரயில் நிலையத்தில் பள்ளி மாணவர்கள் தூய்மை பணி…

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் பள்ளி மாணவர்கள் தூய்மை பணி…

எழுதியவர்: ஆசிரியர் November 29, 2018, 12:08 am

கோவில்பட்டி ரயில்நிலையத்தில் நாடார் நடுநிலைப்பள்ளி தேசிய பசுமைப்படை, ரயில் நிலைய பாதுகாப்பு படை சார்பில் தூய்மை பணி இன்று நடைபெற்றது

நாடார் உறவின் முறைச்சங்கத் தலைவர் ஏ.பி.கே.பழனிச்செல்வம் தலைமை வகித்தார். நாடார் நடுநிலைப்பள்ளி செயலாளர் கண்ணன், ரயில் நிலைய சுகாதார ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாடார் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வி வரவேற்றார். மதுரைக் கோட்ட ரயில் பாதுகாப்பு படை ஆணையாளர் முகைதீன் கலந்து கொண்டு தூய்மைப் பணிகளை துவக்கி வைத்து மரக்கன்றுகளை நட்டார். ரயில் பாதுகாப்புப் குறித்து ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பயணிகளுக்கு விழிப்புணர்வுத் துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

கோவில்பட்டி நாடார் உறவின் முறைச் சங்கம் சார்பில் ரயில் பயணிகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ரூ.25 ஆயிரம் மதிப்பிலான ஒலி பெருக்கி கருவிகள் வழங்கப்பட்டன. இந்த விழிப்புணர்வு ஒலி பெருக்கி அறையைத் ஆணையர் திறந்து வைத்து வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்.

முன்னாள் ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் சேதுரத்தினம், நாடார் உறவின் முறைச் சங்க உறுப்பினர்கள் தாழையப்பன், ராஜாஅமரேந்திரன், மணிக்கொடி உட்பட பலர் கலந்து கொண்டனர். நாடார் நடுநிலைப்பள்ளி தேசிய பசுமைப் படை மாணவர்கள் மேற்பட்டோர் ரயில்நிலைய வளாகத்தில் உள்ள பூங்காவில் தூய்மைப் பணி செய்தனர். பசுமைப்படை ஆசிரியர் அருள்காந்தராஜ் நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!