17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கான புதிய அறிவியல் படைப்பு கண்காட்சி..

இராமநாதபுரத்தில் அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கான புதிய அறிவியல் படைப்பு கண்காட்சி..

எழுதியவர்: ஆசிரியர் November 28, 2018, 6:19 pm

இராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் ‘வீட்டுக்கு வீடு விஞ்ஞானி” அறக்கட்டளை  மாவட்ட நிர்வாக ஒருங்கிணைப்பில் இன்று (28/11/2018) நடைபெற்ற அறிவியல் ரீதியான புதிய சிந்தனை நிகழ்ச்சியில் அரசு பள்ளி மாணவ, மாணவியரின் புதிய அறிவியல் படைப்பு கண்காட்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் பார்வையிட்டு  விளக்கங்கள் கேட்டறிந்தார்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவியர்ன் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவித்து, தனித்திறமைகளை வெளிக்கொணரும் வகையில் மாவட்ட நிர்வாக ஒருங்கிணைப்பில் ‘வீட்டுக்கு வீடு விஞ்ஞானி” அறக்கட்டளை சார்பில் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலை நடுநிலைப்பள்ளிகளில் மாணவ, மாணவியர் உருவாக்கிய புதிய அறிவியல் படைப்புகள் கண்காட்சி நடத்தப்பட்டது.

இன்றைய தினம் ராமநாதபுரம் சக்கரக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி 6,7, 8, 9ஆம் வகுப்பு மாணவ, மாணவியர் பங்கேற்ற அறிவியல் படைப்பு கண்காட்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீர ராகவ ராவ் கலந்து கொண்டு மாணாக்கரின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டு விளக்கம் கேட்டறிந்தார்.

இக்கண்காட்சியில் எளிமையான சாதனங்களை கொண்டு தயாரித்த விவசாய மின் மோட்டாரை வீட்டிலிருந்து இயக்குதல், எரிவாயு கசிவை கண்டறிந்து தகவல் தெரிவிக்கும் சாதனம் உள்பட பல்வேறு புதுமை படைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. கண்காட்சியை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் வீர ராகவ ராவ் எளிய முறையில் ஆக்கப்பூர்வ புதிய அறிவியல் படைப்புகளை தயாரித்த மாணாக்கர்களை பாராட்டி, பரிசு வழங்கினார்.

நமக்கு தெரிந்தவற்றை அறிவியல் பூர்வமாக சிந்தித்து, செயல்வடிவம் கொடுத்து  வெற்றி பெற வேண்டும். அறிவியல்பூர்வ கேள்விகளை உங்களுக்குள்ளே எழுப்பி அதற்கு  விடைகாண வேண்டும். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன், மாவட்டக் கல்வி  அலுவலர் பிரேம், சக்கரக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்  மோகனதாஸ், ‘வீட்டுக்கு வீடு விஞ்ஞானி” அறக்கட்டளை பயிற்றுநர் கார்த்திகேயன் உள்பட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.  
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!